திருச்செந்தூர், கோயிலில் நள்ளிரவு ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூப தரிசனம் மற்றும் உதய மார்த்தாண்ட அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. காலை 7 மணிக்கு யாக சாலை பூஜைகளுடன் கந்த சஷ்டி விழா தொடங்கியது. கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வரும் 17ம் தேதி நடக்கிறது. இதேபோல் பழனியில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு மலைக்கோவிலில் காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி சஷ்டி விரதத்தை தொடங்கினர்.
Comments