இங்கிலாந்து சென்றுள்ள மோடி, அந்நாட்டு கேரூன் உடன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது:
இந்தியாவில் மத சகிப்புத்தன்மையின்மைக்கு இடமில்லை. மதசகிப்புத்தன்மை எங்கள் ரத்தத்தில் கலந்துள்ளது.
இந்தியாவில் தொழில் துவங்கும் தொழில் அதிபர்களுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும். இங்கிலாந்து மற்றும், இந்தியாவிற்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாக உள்ளது. சர்வதேச அளவில் பயங்கரவாதம் மிகப்பெரிய பிரச்னை. இந்தியாவின் வளர்ச்சிக்கு இங்கிலாந்து உதவி வருவதற்கு நன்றி என்று கூறினார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறும்போது, ''ஐநா பாதுகாப்பில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் அளிக்க இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் .பொருளாதாரம், மற்றும் பாதுகாப்பு
குறித்து நாங்கள் விவாதித்தோம். 2003-ல் எனக்கு தடை விதிக்காத நாடு இங்கிலாந்து என்றார்.
Comments