தினமலர் செய்தி : தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்ட கிராமம் ஒன்றில், வயலில் தொழிலாளர்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒரு பெண், தன் மூன்று வயது ஆண் குழந்தையை, அருகில் விளையாட விட்டிருந்தார். அப்போது, வயலில் திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில், குழந்தை விழுந்தது. தகவலறிந்து, போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். ஆழ்துளை கிணற்றில், 40 அடி ஆழத்தில் குழந்தை விழுந்திருக்கலாம் என தெரிவித்த மீட்புக் குழுவினர், ஆழ்துளை கிணறு அருகே குழி தோண்டி, குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
Comments