தினமலர் செய்தி : சென்னை: அ.தி.மு.க.ல ஆட்சியால் ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி தமிழகத்தை பாதிக்கும் என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வரிச்சுமையை பன்மடங்கு ஏற்றிய பிறகும், தமிழக அரசின் கடன் சுமை அதிகரித்திருப்பதற்கு, அ.தி.மு.க., அரசின் நிர்வாகத் திறமையின்மை போன்றவையே காரணம். அ.தி.மு.க., அரசின் கையாலாகாத தனத்தால் ஏற்பட்டிருக்கும் இந்த நிதி நெருக்கடி, தமிழகத்தின் வளர்ச்சியை எதிர்காலத்தில் கடுமையாகப் பாதிக்கக்கூடிய ஆபத்து இருக்கிறது; இது, தமிழகத்தின் துயரம் தான் என கூறியுள்ளார்.
Comments