வெள்ள தடுப்பு நிதியில் ஊழலா? ஸ்டாலின் சந்தேகம்

தினமலர் செய்தி : கடலுார்: ''வெள்ளத் தடுப்பு பணிக்காக செலவு செய்ததாக கூறப்படும், 600 கோடி ரூபாயில், ஊழல் நடந்துள்ளதா என, மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறை கேட்டார்:

கடலுார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, நேற்று, பார்வையிட்ட ஸ்டாலின், மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின், அவர் அளித்த பேட்டி:

'வடகிழக்கு பருவமழை கடுமையாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்கவில்லை. அதனால் தான், இத்தனை பெரிய பாதிப்பு. ஏரிகள், கண்மாய்கள், ஆற்றுபடுகை களை பொதுப்பணித் துறை மூலம் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுத்துஇருக்க வேண்டும்; ஆனால், செய்யவில்லை.

அமைச்சர் பன்னீர்செல்வமோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ, கோடநாடு சென்று, முதல்வரை சந்தித்தாவது, நிவாரண பணிகளுக்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கலாம்.

'கடலுார், விழுப்புரம் மாவட்டங்கள், கொள்ளிடம் ஆற்றுப் படுகையில், வெள்ளத் தடுப்புப் பணிக்காக, 600 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது' என, சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.

நிவாரண உதவிஇந்த நிதியை முறையாக செலவு செய்திருந்தால், மக்களை காப்பாற்றி

இருக்கலாம். வெள்ளத் தடுப்பு நிதியில், ஊழல் நடந்துள்ளதா என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசியல் பாகுபாடின்றி, நிவாரண உதவிகள் வழங்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Comments