சாதித்தது என்ன கட்டுரை விவகாரம்.. கருணாநிதி, ஆனந்த விகடன் மீது ஜெ. புது அவதூறு வழக்கு!!

Jayalalithaa files defamation case against Karunanidhi
OneIndia News : சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் ஆனந்த விகடன் வார இதழ் மீது முதல்வர் ஜெயலலிதா புதிய அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனந்த விகடன் வார இதழில் தமிழக அரசு சாதித்தது என்ற தலைப்பில் விரிவான கட்டுரை ஒன்று வெளியிடப் பட்டிருந்தது. இதனால் ஆனந்த விகடன் இதழை தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் வாங்கி இலவசமாக விநியோகித்தனர்.

இந்த கட்டுரை முரசொலியில் நவம்பர் 21-ந் தேதியன்றும் வெளியாகி இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவை அவதூறு செய்யும் வகையில் இந்த கட்டுரை இருப்பதாக கூறி முரசொலி ஆசிரியரான தி.மு.க. தலைவர் கருணாநிதி, செய்தி ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது இன்று அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதேபோல் ஆனந்த விகடன் வார இதழ் மீதும் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆனந்த விகடன் ஆசிரியர் கண்ணன், பதிப்பாளர் மாதவன் ஆகியோர் மீது இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Comments