சென்னையில் படகு மூலம் மக்கள் மீட்பு: வெள்ளம் பாதித்த பகுதியில் ஜெ,

தினமலர் செய்தி : சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழகம் ஒட்டி ஆந்திரா நோக்கி நகர்வதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என வானிலை மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். சென்னையில் மழைநீர் சூழந்த பகுதிகளில் சிக்கிய மக்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் சென்று மீட்டனர். சென்னை ஆர். கே., நகர் பகுதியில் முதல்வர் ஜெ., வேனில் அமர்ந்து பார்வையிட்டார் .

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையால் சென்னையில் இயல்பு வாழ்க்கை கடுமயைாக பாதிக்கப்பட்டுள்ளது . சென்னை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, உள்ளிட்ட வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. 350 க்கும் மேற்பட்ட ஏரிகள் நிறைந்துள்ளன. செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்தது. இதனையடுத்து ஏரி திறக்கப்பட்டுள்ளது. இதனால் அடையாற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 

இன்றைய வானிலை மைய தகவலின்படி பொன்னேரியில் அதிகப்பட்சமாக 37 செ. மீட்டர் மழை பெய்துள்ளது. அடுத்தப்படியாக தாம்பரத்தில் 33 செ.மீட்டரும் , செம்பரம்பாக்கத்தில் 28 செ.மீட்டரும் ,காஞ்சிபுரம், மீனம்பாக்கத்தில் 27 செ.மீட்டரும் ,நுங்கம்பாக்கத்தில் 25 செ.மீட்டரும் ,மாதவரத்தில் 23 செ.மீட்டரும் , பூந்தமல்லியில் 23 செ.மீட்டரும் ,மதுராந்தகத்தில் 27 செ.மீட்டரும் , திருத்தணியில் 18 செ.மீட்டரும் , திண்டிவனம் , வேலூரில் 10 செ.மீட்டரும் , மழை பெய்துள்ளது.


ஆந்திரா நோக்கி நகரும் புயல் சின்னம் : இன்று ( 16 ம் தேதி ) மழை நிலவரம் குறித்து வானிலை மைய இயக்குனர் ரமணன் நிருபர்களிடம் பேசுகையில் ; தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வுநிலை வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வட தமிழகம் ஒட்டி ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது இதனால் தமிழகத்தின் வடக்கு மாவட்டங்களான சென்னை , வேலூர், விழுப்புரம் , திருவள்ளூர், காஞ்சிபுரம், பகுதிகளில் கனமழை பெய்யும் . தென்மாவட்டங்களின் ஓரிருடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது . தொடர்ந்து மழை படிப்படியாக குறையும். இவ்வாறு ரமணன் கூறினார். 
12 பேருக்கு நிவாரண நிதி : இந்த மழையில் சி்க்கி பலர் பலியாகியுள்ளனர். இவர்களில் 12 பேருக்கு நிவாரண நிதியாக தலா ரூ. 4 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். சென்னையில் அவரது சொந்த தொகுதியான ஆர்,கே,நகர் பகுதியில் முதல்வர் ஜெ., மழை பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். இன்று காலை முதல்வர் ஜெ., அதிகாரிகளுடன் மழை மீட்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தினார்.

மக்களிடையே ஜெ., பேச்சு : சென்னை நகரில் மழையின் காரணமாக பாதிப்படைந்த பகுதிகளில் நிவாரணப்பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆர்.கே.நகர் தொகுதியில் மட்டும் 48 இடங்களில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 3 மாதங்கள் கால அளவிற்கு பெய்யவேண்டிய மழை, சிலநாட்களில் பெய்ததன் காரணமாகவே, இந்த பாதிப்பு என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Comments