இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, 'சிவாஜிக்கு மணிமண்டம் அமைக்கப்படுகிறது. அந்த இடத்தில் இந்த சிலை நிறுவப்படும். அதற்கு, போதிய அவகாசம் தேவை' என, கூறியது.
இதை ஏற்க மறுத்த ஐகோர்ட், செப்டம்பர், 16க்குள் சிலையை அகற்ற உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, நீதிபதிகள் குரியன் ஜோசப், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ், ''அடுத்தாண்டு, செப்டம்பருக்குள், சிவாஜி சிலை அகற்றப்பட்டு விடும். அதற்குள் மணிமண்டபம் அமைக்கும் பணி முடிந்து விடும்,'' என்றார். இதுதொடர்பான பணிகளுக்கு ஆகும் அவகாசம் குறித்த அறிக்கையையும் தாக்கல் செய்தார்.
இதை ஏற்ற நீதிபதிகள், தமிழக அரசின் இந்த அவகாசத்துக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை ஐகோர்ட்டுக்கு உத்தரவிட்டனர்.
Comments