திருவள்ளூர்: நிவாரண முகாம்களில் பொது மக்கள்

தினமலர் செய்தி : திருவள்ளூர்: தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தி்ல் 1620 பேர் 20 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இரவிலும் மழை பெய்தது. இதனால் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நகர் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(16-ம் தேதி) விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments