சென்னை: தீபாவளியன்று வெளியான வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக செமையாக நடித்து பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் லட்சுமி மேனனுக்கு தானே முன்வந்து சம்பளத்தை உயர்த்தி தர சொல்லியுள்ளாராம் அஜித்.
ஆனால் யாரும் அஜித்திற்கு தங்கையாக நடிக்க முன்வரவில்லையாம். ஜோடியாக நடிப்பதற்கு மட்டுமே ரெடியாக இருந்தனர். இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் அஜித்திற்கு தங்கையாக நடிக்க ஒப்பு கொண்டார்.
சினிமாவையும் தாண்டி அஜித் மற்றும் லட்சுமி மேனன் நிஜ வாழ்க்கையிலும் அண்ணன், தங்கையாக பழகி வந்தனராம். பொதுவாக தல அஜித் எந்த ஒரு நடிகர் மற்றும் நடிகைகளில் சம்பளம் விஷயத்தில் தலையிட மாட்டராம்.
ஆனால் தற்போது அஜித் தயாரிப்பாளார் ஏஎம். ரத்தினத்திடம் பேசி, லட்சுமி மேனனுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தீங்க என்று கேட்டுள்ளார். ரத்தினம், சம்பள விவரத்தைச் சொல்ல, உடனே அஜித் அவருக்கு மேலும் கொஞ்சம் தொகையை தன்னுடைய அன்பளிப்பாக வழங்க கோரியுள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments