தமிழகத்திற்கு மத்திய வௌ்ள சேத நிதி: மத்திய அரசு ரூ.940 கோடி உதவி

தினமலர் செய்தி : சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்பட்ட சேதத்திற்கு மத்திய அரசின் நிவாரண நிதியாக ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.முன்னதாக மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஜெ., அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது : கடந்த இரு வார காலத்திற்கும் மேலாக பெய்து வரும் பருவ மழையால் தமிழகம் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 169 பேர் உயிரிழந்துள்ளனர் . 4 லட்சத்திற்கும் மேலானவர்கள் பள்ளிகள் ,மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. வீடுகள், சாலைகள், பாலங்கள் சேதமுற்றுள்ளது . மின் இணைப்பு வழிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு பணிக்கென ரூ .8 ஆயிரத்து 481 கோடி தேவைப்படுகிறது. இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் சேதம் மதிப்பு முழு அளவில் மதிப்பிட முடியவில்லை.

உள் கட்டமைப்புகளை உடனடியாக சீரமைக்க வேண்டியுள்ளது. இதனால் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசின் பேரிடர் நிதியில் இருந்த ரூ.2 ஆயிரம் கோடியை நிதியாக வழங்க வேண்டும் . மேலும் வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிட மத்திய குழுவை விரைந்து அனுப்பிட வேண்டும் இவ்வாறு ஜெ., கூறியுள்ளார்.

இதையடுத்து ரூ.940 கோடியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

Comments