இத்தேர்தலில் தமிழக ஆளும் கட்சியான அண்ணா தி.மு.க.வும் போட்டியிட்டது. அமைச்சர் வேலுமணி தலைமையிலான டீம் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டது. பொதுவாக கேரளா தேர்தலில் பரிசுப் பொருட்கள்தான் அதிகம் கொடுக்கப்படுவது வழக்கம். ஆனால் இம்முறை அ.தி.மு.க.வினர் 1 ஓட்டுக்கு ரூ1,000, 2,000 என வாரி இறைக்க அம்மாநில அரசியல் கட்சிகள் அதிர்ச்சியடைந்தனராம். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கியதால் அ.தி.மு.க.வைச் சேர்ந்த 6 பேர் வெற்றி பெற்றனர். இதில் 5 பேர் பெண்கள். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கேரளா சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க. போட்டியிட வாய்ப்புள்ளது. அப்போதும் இப்படி பணம் வாரி இறைக்கப்பட்டால் தமிழர் வாழும் பகுதிகளில் அ.தி.மு.க.வே வெல்லும் நிலைமை உருவாகும். இதனால் இதுவரை தமிழர் பகுதிகளில் செல்வாக்கு பெற்று வந்த காங்கிரஸ், இடதுசாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன. கேரளாவையும் கெடுத்தாச்சா!
Comments