மின் வாரிய தலைவர், தொழில், நிதி, எரிசக்தி துறைகளின் செயலர்கள், மின் உற்பத்தி, மின் பகிர்மானம், மின் திட்டம் ஆகியவற்றின் இயக்குனர்கள், தமிழ்நாடு மின் வாரிய இயக்குனர் குழுவில் உள்ளனர்.முக்கிய முடிவுகள்இந்த குழு தான், புதிய மின் நிலையம், மின் கொள்முதல் உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு, மின் வாரிய நிறுவன செயலர் மூலம் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, எரிசக்தி துறை செயலர் வழியாக, தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படும். 'மத்திய மின் சட்டம் - 2003'ன் கீழ், மின் வாரியம், தன் மொத்த வருவாய் தேவை அறிக்கையை, ஆண்டுதோறும், நவ., 30க்குள், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும். அதை பரிசீலனை செய்து, ஆணையம், மின் கட்டணத்தில் மாற்றம் செய்யும். ஆனால், 2014 வருவாய் அறிக்கையை மின் வாரியம் இதுவரை தாக்கல் செய்யவில்லை. எனவே, ஆணையம் தன் அதிகாரத்தை பயன்படுத்தி, 2014 டிசம்பரில் மின் கட்டணத்தை உயர்த்தியது.
இந்நிலையில், சென்னை, மின் வாரிய அலுவலகத்தில் நவ., 30 மாலை, 5:30 மணிக்கு, இயக்குனர் குழு கூட்டம் நடக்கிறது. இதில், மின் கட்டணம் உயர்த்துவது குறித்துமுக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.
ஆலோசனை:
இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மின் வாரியத்தின் கடன் அளவை குறைக்க, தமிழ்நாடு மின் பகிர்மானம், பல நிறுவனங்களாக பிரிக்கப்பட வேண்டும். அப்போது தான், மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும். இதனால், மின் பகிர்மானத்தை பிரிப்பது, மின் கட்டணம் உயர்வு, மழையால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய, புதிய மின் உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்டவை குறித்து, இயக்குனர் குழுவில் ஆலோசிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments