டில்லியில் தென்கிழக்கு பகுதியான கோவிந்த்பூரி பகுதியைச் சேர்ந்த வங்கி ஒன்றின் ஏ.டிஎம்., ரூ. 38 கோடியுடன் வங்கியின்(எண்: DL 1LK 9189) வேனில் ஏற்றப்பட்டது. வேனை டிரைவர் பிரதீப் சுக்லா ஓட்டினார். அவருடன் வங்கியின் காவலர் வினாய் பட்டேல் சென்றார். வேன் விகாஷ்பூரி என்ற இடத்தில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் சிறிது பணம் வைக்கப்பட்டது. மீத பணம் ரூ.22.50 கோடியுடன் டில்லி முக்கிய சாலையில் சென்று கொண்டிருந்தது. வங்கி காவலர் வினாய் பட்டேல் வேனை சாலையோரம் நிறுத்துமாறு கூறினார். வேனை விட்டு காவலர் இறங்கிய அடுத்த வினாடியே டிரைவர் பிரதீப் சுக்லா வேனை வேகமாக எடுத்து சென்றார். உடன் சுதாரித்த காவலர் வினாய் பட்டேல் கோவிந்த்பூரி போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இது போன்ற சம்பவம் டில்லியில் முன்னர் நடந்திருந்தாலும், ரூ.22 கோடிக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது இதுவே முதன்முறை என போலீசார் தெரிவிக்கின்றனர்.
வேன் சென்ற முக்கிய சாலையில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி., கேமிரா மூலம் வேன் எங்கு நோக்கி சென்றது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
Comments