பொதுவாக இணையதள வாக்கெடுபில் ஒருவர் பல முறை வாக்களித்திருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கும். ஆனால், நாங்கள் இதில் ஒரு புது உக்தியில் புகுத்திருந்தோம். அதாவது, ஒருவர் எத்தனை முறை வாக்களித்து இருந்தாலும் அவரின் மொபைல், கம்ப்யூட்டர் எண்ணை (IP அட்ரஸ்) வைத்து அவர் போட்டு இருந்த போலி வாக்குகளை நீக்கி, உண்மையாக அவர் எந்த கட்சிக்கு வாக்களித்தார் என்று கணக்கிட்டு இந்த கருத்து கணிப்பு முடிவை தெளிவாக அறிவித்து இருக்கிறோம்.
வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் உங்களின் வாக்கு யாருக்கு என்ற கேள்விக்கு திமுகவிற்கு என 47.56% மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக அதிமுக 23.78%, மதிமுக 12.26%, தேமுதிக 10.49% வாக்குகளும் பெற்றிருக்கிறது.
இதன் படி, வரும் சட்டமன்ற பொது தேர்தலில் திமுக சுமார் 113-120 தொகுதிகளும், அதிமுக 56-60 தொகுதிகளும், மற்றவை 65-70 தொகுதிகளிலும் வெற்றி பெரும். இது இந்த கட்சிகளின் தனி பட்ட செல்வாக்கில் கிடைக்கும் தொகுதிகள். இந்த எண்ணிக்கை கூட்டணிகள் உறுதியான பிறகு மாறலாம்.
2016-ல் தமிழக முதல்வர் யார் என்ற கேள்விக்கு கலைஞர் தான் என்று 28.76% பேரும், ஜெயலலிதா 24.96%, ஸ்டாலின் 23.67%, வைகோ 11.76% மக்களும் வாக்களித் திருக்கிறார்கள். இவர்களில் விஜயகாந்த் வெறும் 6.9௦% பெற்று 5-வது இடம் மற்றுமே பெற்று இருக்கிறார். சமீபகாலமாக இவரின் செயல்பாடுகளின் பிரதிபலிப்பே இவரின் செல்வாக்கு குறைந்ததாக கருத்த படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் செயல் பாடுகள் குறித்த கேள்விக்கு, முதல்வராக அவரின் செயல் பாடுகள் நன்றாக இருக்கிறது என்று வெறும் 18.50% மக்கள் மட்டுமே வாக்களித் திருக்கிறார்கள். அவரின் செயல் பாடுகள் மோசம் என்று 81.50% மக்கள் தங்களின் கருத்தை பதிவு செய்திருக்கிறார்கள். சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு அதன் தொடர்ச்சியான நிகழ்வுகள் அவரின் செயல்பாடுகளை முதல்வராக இருப்பதற்கான தகுதியில் இருந்து தாழ்த்தி இருக்கிறது.
கடந்த 4.5 வருட கால அதிமுக அரசின் செயல் பாடுகள் எப்படி இருந்தது என்ற கேள்விக்கு நன்றாக இருந்தது என்று வெறும் 19% மக்கள் மட்டுமே கூறு இருக்கிறார்கள். மிதம் இருக்கும் 81% மக்கள் மோசம் என்றும், இந்த அரசு எதில் தனது செயல்பாட்டில் தோல்வி அடிந்திருக்கிறது என்ற கருத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
அதிமுக அரசு மோசம் என்று சொன்ன 81% மக்களிடம் இந்த அரசில் என்ன குறை இருக்கிறது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு மின்வெட்டு என்று 21.70% மக்களும், மக்களின் நலனில் அக்கறை காட்டாமல் ஜெ.யின் நலனை மட்டுமே பார்க்கும் அமைச்சர்கள் என்று 14.80% மக்களும், தொழில் முடக்கம் என்று 3.30% மக்களும், ஊழல் என்று 1.80% மக்களும், சொத்து குவிப்பு என்று 1.40% மக்களும், சட்ட ஒழுங்கு என்று 1.10% மக்களும் கூறியிருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக அனைத்திலும் குறை என்று 55.90% மக்கள் தங்களின் கருத்தை பதிந்திருக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக இத்தனை மக்கள் சொல்லிருக்கும் குறையை பார்க்கும் போது அதிமுக அரசு மக்கள் மத்தியில் தனது நம்பக தன்மையை இழந்திருக்குறது என்றே சொல்லல்லாம்.
உங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு நன்றாக இருக்கிறது என்று 21.20% மக்கள் மட்டுமே சொல்லிருக்கிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் மோசம் என்று 78.80% மக்கள் கூறியிருக்கிறார்கள். இதன் படி பார்த்தால், தற்பொழுது உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டு இந்த தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் 80% பேர் தோல்வியையே தழுவும் நிலை ஏற்படும்.
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில் நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பு மக்களின் மனதில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் எண்ணத்தையே பிரதிபலிக்கிறது. கூட்டணி, அதிமுக அரசின் இந்த எஞ்சிய கால ஆட்சியின் செயல்பாடுகளை பொறுத்து மேற்குறிய எண்ணிக்கைகளில் வேறுபாடு ஏற்படலாம். இருந்தும் ஆட்சி மாற்றம் நிச்சயம் என்பதையே இந்த கருத்து கணிப்பு உறுதி செய்திருக்கிறது.
Comments