சென்னை : தமிழகத்தில் கன மழைக்கு 180 பேர் இறந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். அதிகபட்சமாக கடலுார் மாவட்டத்தில், 55 பேர் இறந்துள்ளனர்.இவர்களில், 85 குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, தலா, 4 லட்சம் ரூபாய் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்; மற்றவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.மாவட்ட வாரியாக பலி எண்ணிக்கை விவரம்:
மாவட்டம் - பலி
கடலுார் - 55
காஞ்சிபுரம் - 22
விழுப்புரம் - 15
வேலுார் - 7
சென்னை - 5
நாமக்கல் - 2
கன்னியாகுமரி - 3
சேலம் - 2
கிருஷ்ணகிரி - 2
திருவண்ணாமலை - 1
திருவள்ளூர் - 2
நீலகிரி - 1
திருநெல்வேலி - 1
Comments