தீபத் திருநாள் தேரோட்டம்: தீப திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 22 ஆம் தேதி நடக்கிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் 25-ந் தேதி மாலை 6 மணிக்கு ஏற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 3 நாட்கள் உற்சவம்: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்திற்கு முன்பு 3 நாட்கள் உற்சவம் நடக்கும். அதன்படி முதல் நாள் உற்சவமான துர்க்கையம்மன் உற்சவம் நேற்று நடந்தது. துர்க்கையம்மன் கோவில் அலங்காரம்: இதற்காக சின்னக்கடை தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோவிலில் நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது அதைத்தொடர்ந்து துர்க்கையம்மன் வீதி உலா நடந்தது. காமதேனு வாகனம்: துர்க்கையம்மன் கோவிலில் இருந்து காமதேனு வாகனத்தில் புறப்பட்டு அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Comments