அதிர்ச்சியில் உறைந்தது பாரிஸ் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு- குண்டுவெடிப்பு: 158 பேர் பலி

தினமலர் செய்தி : பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா ஹால் உள்ளது . இங்கு துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் திடீரென சரமாரியாக சுட்டான். பலர் அலறியடித்து ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 26 பேர்பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்தன. பின்னர் 158 ஆக பலி எண்ணிக்கை அதிகரித்தது.மேலும் 100 பேர் பிணைக்கைதிகளாக சிக்கியுள்ளனர்.

இந்தசம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரிஸ் நகரில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மர்ம மனிதன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பின்னர் வடக்கு பாரிஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் என 7 இடங்களில் நடந்த குண்டுவெடிப்பில் 158பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது பயங்கரவாத தாக்குதல் என கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடந்த சம்பவம் பிரானஸ் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாரீஸ்நகரில் உள்ள மக்கள் பீதியில் உறைந்துபோய் உள்ளனர். இந்நிலையில் அங்கு 1500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அமைச்சரவை கூட்டம்

சம்பவம் நடந்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹோலாண்டே அமைச்சரவை கூட்டத்தைகூட்டி ஆலோசனை நடத்தினார். பிரான்ஸ் தலைநகரில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்ததையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார் அதிபர் ஹோலாண்டே. மேலும் சர்வதேச எல்லைகளை மூடவும் உத்தரவிட்டார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா கண்டனம்:அமெரிக்க அதிபர் ஒபாமா இச்சம்பவத்தை மனிததன்மையற்ற செயல் என தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வேதனை: குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பிரதமர் மோடி, டுவிட்டரில் பலியான குடும்பத்தினருக்கு தனது வேதனையை தெரிவித்ததோடு இச்சம்பத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments