பேய் மழை... சென்னை உள்பட 12 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Schools and colleges  will be closed tomorrow in Cuddalore : CollectorOneIndia News : சென்னை : தமிழகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் கடலூர் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மழையில் சிக்கி, கடலூரில் மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. கனமழை தொடர்வதால், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளையும், நாளை மறுநாளும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாமக்கல், விழுப்புரம், நாகப்பட்டினம், வேலூர், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அமைச்சர் தியாகராஜன் அறிவித்துள்ளார். சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, நாளை 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை அண்ணா பல்கலைகழகம் சார்பில் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Comments