வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, 9ம் தேதி மாலை, கடலூர் அருகே கரையைக் கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கன மழை பெய்ததால், கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கியும், வீடுகள் இடிந்தும், 28 பேர் இறந்துள்ளனர்; ஏராளமான கால்நடைகள், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மின்சாரம் துண்டிப்பு:
பயிர்கள் சேதம்:
சம்பா நெல், 50 ஆயிரம் ஏக்கர்; கரும்பு, 1,250; சோளம், 250; உளுந்து, 2,500; வாழை, 1,125; தோட்டக்கலை பயிர்கள், 75 ஆயிரம் ஏக்கர் என, மொத்தம், 1.30 லட்சம் ஏக்கர் பயிர்கள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளன. அதாவது கடலூர் மாவட்டத்தில், மழை சேதத்தின் அளவு, 1,000 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு:
சேதம் விவரம்:
வெளியேற்றம் ஏன்?
அமைச்சர்கள் குழு விரைவு:
கடலூர் மாவட்டத்தில், மழை நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டதால், ஐந்து அமைச்சர்கள் அடங்கிய குழு, கடலூருக்கு விரைந்து உள்ளது.இது தொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை காலமான, அக்டோபர் முதல் டிசம்பர் வரை, 440 மி.மீ., மழை பெய்யும். வங்கக் கடலில் உருவான, தீவிர காற்றழுத்த மண்டலம் காரணமாக, மூன்று நாட்களில், 300 மி.மீ., மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு, 697 மி.மீ., தற்போது வரை, 500 மி.மீ., மழை பெய்துள்ளது. பெருமழை காரணமாக, அங்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மற்றும் 9ம் தேதிகளில் மட்டும், 266 மி.மீ., மழை பெய்துள்ளது. மிக அதிக மழை பெய்ததால், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப்சிங் பேடி, அங்கு அனுப்பப்பட்டு, நிவாரணப் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.மேலும், பல்வேறு துறைகளைச் சேர்ந்த, ஏழு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அங்கு முகாமிட்டு, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில், மழையால் பாதிக்கப்பட்ட, 29 ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறது.
இப்பணிகளை ஒருங்கிணைக்க, தலா, இரண்டு சப் - கலெக்டர்கள் தலைமையிலான ஐந்து குழுக்கள் உள்ளன.நான்கு சப் - கலெக்டர்கள், 23 சார்நிலை அலுவலர்கள் அடங்கிய குழுவினர், கடலூர் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டு, நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெருமழை காரணமாக, 2,000 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் தடைபட்டது. 2,000 மின் ஊழியர்கள் அனுப்பப்பட்டு, மின் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. 683 கிராம ஊராட்சிகளில், 430ல், மின் வினியோகம் சீர் செய்யப்பட்டு உள்ளது. சீர் செய்யப்படாத ஊராட்சிகளில், லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
பொது சுகாதாரத் துறை இயக்குனர் தலைமையில், தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க, மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பழுதடைந்த சாலைகளை, போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், முறையாக பயிர் சேதத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே அறிவித்த நிவாரணத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேவனாம்பட்டினம் மீன்பிடி கிராமத்தில் இருந்து, 100 வல்லம், கெடிலம் ஆற்று வெள்ளத்தால் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன. கடலோர பாதுகாப்பு படை உதவியுடன் இரண்டு நாட்களாக, வான்வழி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, இரண்டு இடங்களில், 40 வல்லம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மீட்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில், 90 கால்நடை மருத்துவக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதுடன், தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதைய வெள்ளத்தில், இம்மாவட்டத்தில், 27 பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு, நிவாரண உதவித்தொகை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கால்நடை இழப்பு மற்றும் குடிசை சேதத்திற்கும், நிவாரண உதவி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஜெயபால், உதயகுமார் ஆகியோரை அனுப்பி உள்ளேன்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துஉள்ளார்.
பலத்த மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில், 'மெரைன் கமாண்டோ' எனப்படும், கடலோர பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த, 25 கமாண்டோ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் நேற்று, கடலூர் அருகே கோண்டூர் கிராமத்தில், வீட்டுக்குள் சிக்கித் தவித்த நான்கு மூதாட்டிகளை, நீண்ட நேரம் போராடி மீட்டனர். மேலும், ஏராளமான கால்நடைகளையும் மீட்டு உள்ளனர். இதேபோல, வங்கக்கடலில் சிக்கித் தவித்த படகையும், அதிலிருந்த ஆறு பேரையும், கடலோர காவல் படையைச் சேர்ந்த, 'ராணி அபாக்கா' என்ற மீட்பு கப்பல், பத்திரமாக மீட்டு கரை சேர்த்தது.
Comments