வெள்ள நிவாரணம்: தி.மு.க., ரூ.1 கோடி நிதி

தினமலர் செய்தி : சென்னை,:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: பத்து நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழை, வெள்ளம் காரணமாக, அனைத்துப் பிரிவு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்; பலர் வீடு இழந்து, வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர்.

அவர்களின் துயரில் பங்கேற்கும் விதமாக, தி.மு.க., சார்பில், துயர் துடைப்பு நிதியாக, ஒரு கோடி ரூபாய், தமிழக அரசிடம் வழங்கப்படும். மேலும், அரசு அறிவித்துள்ள, 500 கோடி ரூபாய் என்பது, ஏற்பட்டிருக்கும் இழப்பின் அளவோடு ஒப்பிடுகையில், மிகவும் குறைவு. அதனால், மத்திய அரசின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, பெரும் அளவுக்கு நிதி பெறவும், வசதி படைத்தோரிடமிருந்து, நிவாரண நிதி திரட்டவும், உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comments