ஆப்கன் பார்லி.,யில் பயங்கரவாதிகள் தாக்குதல்: எம்.பி.,க்கள் அலறி ஓட்டம்

தினமலர் செய்தி : காபூல்: ஆப்கன் பார்லி.,யில் பயங்கரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து எம்.பி.,க்கள் பத்திரமான இடத்திற்கு அப்புறப் படுத்தப்பட்டனர்.

தலிபான் பயங்கரவாதிகள் ஆப்கனில் தாக்குதலை பலப்படுத்தி வருகின்றனர். இன்று காலையில் காபூலில் உள்ள பார்லி., வளாகம் அருகே பலத்த சப்தத்துடன் குண்டு வெடித்தது. 6 இடங்களில் இந்த குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. தற்கொலை படையினர் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.


மேலும் பயங்கரவாதிகள் சிலர் கை துப்பாக்கியால் சுட்டு வருகின்றனர். 6 பேர் கொல்லப்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. முழுச்சேதம் குறித்த தகவல்கள் ஏதுமில்லை.

கரும் புகை சூழ்ந்தது: பார்லி., அருகே பெரும் கரும்புகை சூழ்ந்துள்ளது. நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. சம்பவ இடத்திற்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Comments