தினமலர் செய்தி : சென்னை: ஆர்.கே., நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா,
எண்ணூர் சாலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கையில், பொதுத்தேர்தல் நடைபெற
இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், பொது மக்கள் விரும்பாத இடைத்தேர்தல்
இது. அரசியல் சதி காரணமாக வழக்கு போடப்பட்டது. இந்த தேர்தல், இடையூறு
செய்தவர்களுக்கு நிரந்தர விடை கொடுக்கும் தேர்தல். இதனால், இடையூறு
செய்தவர்கள் தேர்தலில் போட்டியிடாமல், பல்வேறு கற்பனை கதைகளை கூறி
வருகின்றனர். தமிழகத்திற்காகவும், தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவும்
தொடர்ந்து உழைப்பேன். பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
அ.தி.மு.க., அரசு சிறுபான்மை, ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாக்கும் அரசாக
உள்ளது கடந்த 4 ஆண்டுகளில் கூடுதல் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
என பேசினார்.
Comments