'அமைதிக்கான புது சகாப்தம் யோகா' : ராஜ்பாத்தில் பிரதமர் மோடி உரை

தினமலர் செய்தி : புதுடில்லி : சர்வதேச யோகா தினத்தையொட்டி, புதுடில்லி ராஜ்பாத்தில் பிரதமர் மோடி தலைமையில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி 'அமைதிக்கான புது சகாப்தம் யோகா' எனக் குறிப்பிட்டார். முன்னதாகஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது உரையை நிகழ்த்தினார்.


மோடி உரை : சர்வதேச யோகா தினத்தை துவக்கி வைத்த மோடி, பொதுமக்கள் அனைவருக்கும் யோகா தின வாழ்த்துகளை கூறி தனது உரையை துவக்கினார். அவர் பேசியதாவது: இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். டில்லி ராஜ்பாத் , "யோகா பாத்" ஆக மாறும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியர்களால் உருவாக்கப்பட்ட கலை இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

புத்துணர்ச்சி : யோகா மனித மூளைக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது. மனிதர்கள் முன்னேற்றப்பாதையில் செல்ல யோகா வழிவகுக்கும். அமைதிக்கான புது சகாப்தத்தை உருவாக்க நாம் இங்கு வந்துள்ளோம். யோகா என்பது கொண்டாடுவதோடு முடிந்து விடாது; அது மனதை அமைதிப்படுத்தும் கலை.

ஐ.நா.,வுக்கு நன்றி: இன்று யோகா தினமாக அறிவித்த ஐ.நா.,வுக்கும், அறிவிக்க உதவிய 117 உலக நாடுகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

ஜனாதிபதி உரை: முன்னதாக உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தனது உரையில், நோயிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல; நோயிலிருந்து காப்பது யோகா; பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த யோகா பயிற்சி அல்ல; அது ஒரு அறிவியல் கலை எனக் குறிப்பிட்டார்.

Comments