டில்லியில் ஜப்தர்ஜங், மௌலானா ஆசாத், லேடி ஹார்டிங்ஸ் , ராம் மனோகர் லோகியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரபலமான மருத்துவமனைகள் உள்ளன. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டாக்டர்கள் கோரிக்கை ; டில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் துப்புரவு பணியாளர்கள் சம்பள பிரச்னைக்காக போராட்டம் நடத்தினர். இதனால் டில்லி நகரமே நாறிப்போனது. அரசியல் காரணங்களால் டில்லி நகரம் இப்படி பாழாய் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் டில்லியில் உள்ள 20 மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்டர்கள், தங்களுக்கு பணி பாதுகாப்பு, சம்பள பிரச்னை, சுத்தமான குடிநீர், சுகாதாமான அடிப்படை வசதிகள் செய்து தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று காலை முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்தனர். பணிக்கு வராதததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாயினர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
கெஜ்ரிவால் ஆதரவு ; இந்த வேலைநிறுத்தம் குறித்து டில்லி ஆம் ஆத்மி கட்சி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், டாக்கடர்களின் கோரிக்கை நியாயமானது தான். அதனை உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார்.
முன்னதாக குப்பை அள்ளாத விவகாரத்தில் அரசியல் கலந்தது. துப்புரவு தொழிலாளர்களுக்கு ஆதரவாக காங். துணை தலைவர் ராகுல் சாலையில் அமர்ந்து தர்ணா செய்தார். பிரச்னை முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது டாக்டர்கள் ஸ்டிரைக் பிரச்னை டில்லியில் துவங்கியுள்ளது.
Comments