நாளை அப்பீல் இல்லை: ஆச்சார்யா

தினமலர் செய்தி : பெங்களூரு : சொத்துகுவிப்பு வழக்கில் ஜெ.,வின் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை மேல்முறையீடு செய்யும் திட்டம் இல்லை என கர்நாடக அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மேல்முறையீடு தொடர்பாக அனைத்து ஆடணங்களும் தயார் செய்யப்பட்டு, டில்லி கர்நாடக பவனிற்கு சரிபார்க்க அனுப்பப்பட்டுள்ளது. அதன் நகல்கள் தயார் செய்ய 5 நாட்கள் வரை ஆகலாம். அதனால் என்றைக்கு அப்பீல் செய்வது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. தற்போது சுப்ரீம் கோர்ட் விடுமுறை என்பதால் ஜூலை முதல் தேதிக்கு பிறகே அப்பீல் செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

Comments