எமர்ஜென்சிக்காக சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: அத்வானி பேட்டி

தினமலர் செய்தி : புதுடில்லி: எமர்ஜென்சி பிறப்பிக்கப்பட்டதற்கு இந்திரா தான் முக்கிய காரணம் எனவும், இதற்காக சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், நேற்று எமர்ஜென்சி குறித்து நான் தெரிவித்த கருத்து யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.
அனைத்து வகையான சர்வாதிகாரத்திற்கும் நான் எதிர்ப்பு தெரிவிக்கிறேன். இதற்கு மீடியாக்கள் தான் காரணம். காங்கிரஸ் கட்சியை குறிவைத்தே எமர்ஜென்சி குறித்து கருத்து தெரிவித்தேன்.

எமர்ஜென்சி பிறப்பிக்க இந்திராவே முக்கிய காரணம். இதற்கு இந்திராவை மன்னிப்பு கேட்க முடியாது. எமர்ஜென்சி பிறப்பித்ததற்காக சோனியா, ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும். எமர்ஜென்சிக்காக காங்., வருத்தப்படவில்லை. கருத்து வேறுபாடுள்ள கட்சிகள் ஒன்றிணைய எம்ஜென்சி தான் காரணம். சஞ்சய் மற்றும் ரே ஆகியோர் எமர்ஜென்சியில் ஒரு பங்கு உள்ளது. ஆனால், எமர்ஜென்சிக்கு இந்திரா தான் முக்கிய காரணம். ஹிட்லரின் ஆட்சிக்கும், இந்திராவின் எமர்ஜென்சி காலத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

முன்பை விட தற்போது வலிமையான ஜனநாயகம் உள்ளது. சிவிலியன்கள் பாதுகாப்புக்கு மீடியாக்கள் பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மீடியாக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். ஜேபி உருவாக்கிய கட்சி தொடர்பான விதிமுறைகளில் எனக்கும் வாஜ்பாய்க்கும் உடன்பாடு இல்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது எனக்காக வாஜ்பாய் கிச்சடி செய்து கொடுத்தார். வாஜ்பாய், நான் மற்றும் சிலர் கைது செய்யப்பட்டபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இன்றைய அரசியல் தலைவர்கள் வாஜ்பாய் போன்று நவீனமானவர்களாக இருக்க வேண்டும் என கூறினார்.

Comments