தினமலர் செய்தி : புதுடில்லி: லட்சத்தீவில் உள்ள
ஆகாட்டி, மினிகாய் தீவுகளை, இந்தியாவிற்கு வருகை தரவும், வெளியேறும்
பகுதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அங்கீகாரம் :
ஆகாட்டி, மினிகாய் தீவுகளில் சோதனை சாவடிகளை அமைத்து, அதில் அதிகாரிகளாக
லட்சத்தீவு காவல்துறை கண்காணிப்பாளரை நியமித்துள்ள மத்திய அரசு, உரிய
ஆவணங்களுடன் இந்தியாவிற்கு வருகைதரும் அனைத்து பயணிகளின் நுழைவு,
வெளியேறும் பகுதிகளாக ஆகாட்டி, மினிகாய் தீவுகளை அங்கீகரித்துள்ளது.
நேரம் குறையும்:
இரண்டு தீவுகளிலும் குடியேற்றத்துறையின் சோதனைச் சாவடி அமைப்பதன் மூலம்,
இந்தியாவுக்கு வரும் கப்பல்கள், வந்து செல்வதற்கான நேரம் குறையும் எனவும்
தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இந்தியப் பெருங்கடலில்
கப்பல் போக்குவரத்து மிகுந்த இடத்தில் மினிகாய் தீவு அமைந்துள்ளது. இதன்
பரப்பளவு 4.80 சதுர கி.மீ., ஆகாட்டி தீவு 3.84 ச.கி.மீ., பரப்பினை கொண்டது.
Comments