தினமலர் செய்தி : இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் நமது பிரதமர் மோடி
போனில் பேசிய பிறகு, பாகிஸ்தானின் தொனி மாறி உள்ளது. இந்தியாவுடன் அமைதிப்
பேச்சுவார்த்தை நடத்தும் மனநிலைக்கு வந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு நவாஸ் ஷெரீப்பை போனில் தொடர்பு கொண்ட மோடி, ரம்ஜான் வாழ்த்துக்களைக் கூறினார். இந்த நட்புறவு வார்த்தைகளை பாக்., எதிர்பார்க்கவில்லை போலும். தற்போது, சண்டை மனநிலையில் இருந்து சமாதான மனநிலைக்கு வந்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு நவாஸ் ஷெரீப்பை போனில் தொடர்பு கொண்ட மோடி, ரம்ஜான் வாழ்த்துக்களைக் கூறினார். இந்த நட்புறவு வார்த்தைகளை பாக்., எதிர்பார்க்கவில்லை போலும். தற்போது, சண்டை மனநிலையில் இருந்து சமாதான மனநிலைக்கு வந்துள்ளது.
அந்நாட்டின் வெளியுறவு அதிகாரிகள் வட்டாரத்தில் இது குறித்து கூறும்போது,
""இந்தியாவுடன் அமைதியான உறவை ஏற்படுத்தவே விரும்புகிறோம். காஷ்மீர் உள்பட அனைத்து அம்சங்கள் பற்றியும் பேச தயாராக இருக்கிறோம்
ஆனால் பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகளை இந்தியா விதிக்கக் கூடாது. பேச்சுவார்த்தை என்பது ஒரு வழிப்பாதை அல்ல. பாகிஸ்தானுக்கு என உள்ள சில பிரச்னைகளையும் இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்கின்றனர்.
நவாசுடன் மோடி பேசும்போது, ""வாழ்த்துக்களுடன் பாகிஸ்தானுடன் நல்லுறவை இந்தியா விரும்புகிறது'' என்றும் தெரிவித்ததாகவும், அதற்கு பதில் அளித்த நவாஸ், ""நாட்டின் தலைவர்கள், ஒரு குடும்பத்தின் தலைவர் போன்றவர்கள். மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டியது தலைவர்களின் கடமை. இந்த நோக்கத்திற்காகவே இந்தியாவும் பாக்.,கும் பாடுபட வேண்டும்'' என தெரிவித்ததாகவும் விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் உள்ள உபா நகரில் அடுத்த மாதம் "ஷாங்கை கூட்டுறவு அமைப்பு' மாநாடு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள செல்லும்போது, மோடியும் நவாசும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Comments