தினமலர் செய்தி : புதுடில்லி: பிரதமர் மோடி, இந்தாண்டு இறுதிக்குள் சவுதி அரேபியா செல்வார் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது : இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல, மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, சவுதி உள்ளிட்ட மூன்று வளைகுடா நாடுகளுக்கு அவர் செல்வார் என, தெரிகிறது.
அரசியல்
ரீதியாக, இஸ்ரேல் செல்வதற்கு முன், அரபு நாடுகளுக்கு செல்வது தான்
சிறந்தது. ஆனால், இஸ்ரேல் பயண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
எனினும், அடுத்த இரண்டு மாதங்களில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ்,
இஸ்ரேல், பாலஸ்தீனம் மற்றும் ஜோர்டான் நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
அதன்பின், பிரதமரின் இஸ்ரேல் பயண தேதி முடிவாகும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து, அரசு உயரதிகாரி ஒருவர் கூறியதாவது : இஸ்ரேல் நாட்டிற்கு செல்ல, மோடி திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக, சவுதி உள்ளிட்ட மூன்று வளைகுடா நாடுகளுக்கு அவர் செல்வார் என, தெரிகிறது.
கடந்த, 2014, நவம்பரில், ஆஸி.,யின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற, 'ஜி20' மாநாட்டில், மோடியும், சவுதி இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜீசும் சந்தித்து பேசினர்.முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், 2010ல், சவுதி சென்றார். இந்திய பிரதமர் ஒருவர், 28 ஆண்டு களுக்குப் பின் சவுதி சென்றதை அடுத்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவு வலுவடைந்தது.
இதைத்தொடர்ந்து, மோடி அரசில், பெட்ரோலியத் துறை அமைச்சராக உள்ள தர்மேந்திர பிரதான், கடந்த ஆண்டு அக்டோபரில், சவுதி சென்றார். இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய வர்த்தக நாடாக சவுதி விளங்குகிறது. 2013 - 14ம் நிதியாண்டில், இந்தியா - சவுதி இடையிலான பரஸ்பர வர்த்தகம், 4,862 கோடி டாலரை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments