யோகா: ராம்தேவ் பேச்சால் மீண்டும் சர்ச்சை

தினமலர் செய்தி : புதுடில்லி : யோகாவின் பெயரால் பா.ஜ., மதத்தை புகுத்த நினைப்பதாக கூறி சூரிய நமஸ்காரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யோகா குரு ராம்தேவின் பேச்சு மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சூரிய நமஸ்காரம் என்பது யோகாவின் மூச்சுப் பயிற்சிகளில் ஒன்று. அதனை செய்து பாருங்கள். அதனால் உங்கள் மதம் என்ன மாறி விட்டதா? ஒருவேளை நீங்கள் சார்ந்த மதம் பலவீனமானதாக இருந்தால் அதனை யோகா மிரட்டுவதாக இருக்கும். அப்படி இருந்தால் அந்த மதத்தில் இருந்து வெளியேறி விடுவிங்கள். பலவீனமான மதத்தை எதற்காக நீங்கள் பின்பற்ற வேண்டும்? என பேசி உள்ளார்.

Comments