பெங்களூரை சேர்ந்த யோகா
மாஸ்டர் எச்.ஆர்.நாகேந்திரா. இவர் தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு யோகா
ஆசான். மோடியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
1980
முதல் மோடிக்கு யோகா ஆலோசகராக இருக்கிறேன். மோடியின் அழைப்பின் பேரில்
குஜராத்திலும் டில்லியிலும், உயர் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தேன்.
யோகா
மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தை குறைக்கலாம். ஆஸ்த்மா, புற்றுநோய்,
மனநோய்களுக்கும் சிகிச்சை அளிக்கலாம். என்னிடம் பயிற்சி எடுத்த பலர்,
நோய்களுக்காக ஏற்கனவே உட்கொண்டிருந்த மருந்துகளை நிறுத்தி விட்டனர்.
நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து தியானத்தின் ஆழம் வரை சென்று பார்த்துவிட்டேன். சமாதி நிலையையும் அடைந்தேன்.
தியானம்
என்பது ஏதாவது ஒரு வார்த்தையை உச்சரித்துக்கொண்டே இருப்பது. உதாரணமாக நான்
"ஓம்' என்று உச்சரிக்கிறேன். தொடர்ந்து மனதுக்குள் சொல்லி வந்தால், மனம்
ஒருநிலைப்படும்.
இப்படியே தொடர்ந்து மணிக்கணக்கில் சொல்லிக்கொண்டே இருக்கும்போது, ஒரு கட்டத்தில் நம்மையே நாம் மறந்து விடுவோம். அது தான் சமாதி நிலை.
சந்தித்தது எப்படி?:
1980களில் பெங்களூருவில் உள்ள எனது மையத்திற்கு மோடி வருவார். அப்போது
அவர் எந்த அமைச்சரும் கிடையாது. பின் அவர் குஜராத் முதல்வரானார். ஆண்டுக்கு
நாலைந்து முறை நாங்கள் சந்திப்போம். அந்த நட்பு இன்னமும் தொடர்கிறது.அவர்
ஒரு அற்புதமான மனிதர். யோகாவை அறிவியல் ரீதியாக ஆராய வேண்டும் என அவர்
ஆசைப்படுகிறார்.
யோகாவின் அடிப்படையை நன்கு வேகமாக
கற்றுக்கொண்டவர். தினமும் யோகா பயிற்சி செய்கிறார். அவரது அனைத்து
அமைச்சர்களும் யோகா செய்கின்றனர்.
எங்கு பயணம் செய்தாலும், அங்கும் யோகா செய்வார் மோடி. இதனால் தான் அவர் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.
நான்
அவருக்கு குரு அல்ல, நண்பர். அவர் தானாகவே அனைத்தையும் கற்றுக்கொள்கிறவர்.
அவருக்கு குரு யாரும் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Comments