தினமலர் செய்தி : சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்
வெளியிட்ட அறிக்கையில், பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயக்கொள்கையில்
மாற்றம் செய்ய வேண்டும். விலை நிர்ணய அதிகாரத்தை எண்ணெய்
நிறுவனங்களிடமிருந்து திரும்ப பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால்
விலைவாசியில் நிச்சயமற்ற தன்மை ஏற்படும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால்
அனைத்து பொருட்களின் விலை உயரும். இதனால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம்
பாதிக்கப்படும். காங்கிரஸ் அரசு கடைபிடித்த தவறான கொள்கையையே, பா.ஜ.,
அரசும் கடைபிடித்து வருகிறது என கூறினார்.
Comments