தினமலர் செய்தி : ஊட்டி: தேசிய அளவில், காய்கறி உற்பத்தியில், தமிழகம் முதலிடம்
பெற்றுள்ளது,'' என, வேளாண் துறை செயலர் ராஜேஷ் லக்கானி
தெரிவித்தார்.நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், மலர்
கண்காட்சி துவங்கியது; இதை, கவர்னர் ரோசையா துவக்கி வைத்தார். வேளாண் துறை
செயலர், ராஜேஷ் லக்கானி பேசியதாவது:ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட
மலர்கள், ஊட்டி பூங்காவில் மட்டும் தான் உள்ளன.இந்திய அளவில், காய்கறி
உற்பத்தியில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் உற்பத்தியாகும், 17.5
லட்சம் டன் காய்கறிகளில், 3.44 லட்சம் டன் காய்கறிகள், தமிழகத்தில்
உற்பத்தி செய்யப்படுகிறது.உதிரி பூக்கள் உற்பத்தியிலும், தமிழகம் முன்னிலை
வகிக்கிறது.இவ்வாறு, லக்கானி தெரிவித்தார்.வேளாண் அமைச்சர் வைத்திலிங்கம்,
கலெக்டர் சங்கர் உட்பட பலர், விழாவில் கலந்து கொண்டனர்.
Comments