சில தினங்களுக்கு முன் நானும் ரெளடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவனை
காதலித்து, திடீர் திருமணமும் செய்துகொண்டதாகத் தகவல் வெளியானது.
கொச்சியில் உள்ள சர்ச் ஒன்றில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்
நடந்ததாகவும், இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் இன்று
செய்தி வெளியாகியது. இதனால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
சமூக வலைத் தளங்களில் இந்த செய்தி வைரலாகப் பரவிக் கொண்டுள்ளது.
உடனடியாக இயக்குநர் விக்னேஷ் சிவன் இச்செய்திக்கு மறுப்பு
தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில், ‘திருமண வதந்தியில் உண்மை கிடையாது. இதுபோன்ற செய்திகள்
வேலையை மட்டுமில்லாமல் தனிப்பட்டமுறையிலும் பாதிக்கிறது' என்று விக்னேஷ்
சிவன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை நயன்தாராவைத் தொடர்பு கொண்டு இதுகுறித்துக் கேட்டபோது, "இதில்
எந்த உண்மையும் இல்லை. வேலையற்றவர்களின் வேலை இது. நான் படப்பிடிப்பில்
கலந்துகொண்டு நடித்து வருகிறேன்.
ஆதாரமில்லாத செய்தியைப் பரப்பும் ஊடகங்கள், என் விஷயத்தில் கொஞ்சம்
கேப் கொடுக்கலாம். ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது பெரிய விஷயம். அது என்
வாழ்விலும் நடக்கும். அப்படி நடக்கும்போது நிச்சயம் உலகத்துக்கு
அறிவிப்பேன். அவசர அவசரமாக ஒளிந்து மறைத்து திருமணம் நடத்தும் அவசியம்
எனக்கு இல்லை," என்றார்.
சிம்பு நடித்த போடா போடி படத்தை இயக்கியவர், விக்னேஷ் சிவன்.
அடுத்ததாக தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் நானும்
ரெளடிதான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். படப்பிடிப்பில் விக்னேஷும்
நயனும் நெருக்கமாக இருப்பதாகவும், விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா கார்
பரிசளித்ததாகவும் செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
Comments