மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார். அவருக்கு பாரம்பரிய முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் 24 ஒப்பந்தங்கள் மேற்கொண்டார்.
ஒவ்வொரு முறையும் பிரதமர் மோடி வெளிநாடு சென்றால் அங்கு செல்பி எடுப்பதை ஆர்வமாக கொண்டுள்ளார். அதே போன்று நேற்றுநேற்று பீய்ஜிங் நகரில் பிரதமர் லீ-கெகியாங்கை சந்தித்தார். பின்னர் இருவரும் டெம்பிள் ஹேவன் என்ற கோயிலுக்கு சென்றனர். அங்கு தைச்சி என்ற நடன நிகழ்ச்சி மாணவர்களால் நடத்தப்பட்டது. அதனை மோடி கண்டு ரசித்து அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.
மோடியின் செல்பி ஆர்வம்
இதையடுத்து சீனாவில் புகழ்பெற்ற டெம்பிள் ஆப்ஹேவன்' என்ற கோயில் வளாகத்தில் நின்று கொண்டு, இரு நாட்டு பிரதமர்களும செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி மொபைல் போனில் 'கிளிக்' செய்தார்.
5 லட்சம் பேர் பார்த்தனர்
'இது செல்பி நேரம் நன்றி பிரதமர் லீ கெகியாங்' என்ற தலைப்பில் இந்த படம் மோடியின் வலைப்பதிவில் வெளியானது.
வெளியான ஆறு மணிநேரத்திற்குள், பேஸ் புக் சமூகவலைத்தின் நிறுவனர் மார்க் சுகர்பெர்க் உள்பட 5 லட்சத்து 7 ஆயிரத்து 277 பேர் விரும்பி பார்த்து ரசித்துள்ளனர்.இதையடுத்து இந்த செல்பி புகைப்படத்தினை முன்னணி பத்திரிகையான போர்பஸ், பத்திரிகை உலகின் தலைசிறந்த செல்பி படமாக அறிவித்துள்ள. பின்னர் சீனாவின் சமூக வலைத்தளத்தினை பயன்படுத்துவோர் இந்த செல்பி படத்தினை கவர்ச்சிமிக்க படம் என பாராட்டியுள்ளனர். டிவீட்டரிலும் இந்த படம் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
Comments