இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் பெங்களூரு
சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு என்பதால்
அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம்.என கர்நாடக முதல்வர்
சித்தராமைய்யா கூறி இருந்தார்.
அதே நேரத்தில் தி.மு.க. தரப்பில் சோனியா காந்தி மூலமாக கர்நாடகா அரசுக்கு
நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை
எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்தராவ் வர்மா கர்நாடக சட்டத்துறை அமைச்சர்
ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த பரிந்துரை கடிதத்தின் மீது வரும் 21 ந்தேதி நடைபெறும் கர்நாடகா
சட்டசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
அனேகமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து ஜூன் முதல் வாரத்தில் மேல் முறையீடு
செய்யப்படும் என கர்நாடகா நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Comments