தினமலர் செய்தி : சென்னை: அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவு பெறுவதை,
ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் கொண்டாட, அ.தி.மு.க.,வினர் முடிவு
செய்துள்ளனர்.
கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது.
மூன்றாவது முறை முதல்வராக, 2011 மே 16ம் தேதி, ஜெயலலிதா
பொறுப்பேற்றார்.இதன்படி, நேற்று முன்தினம், நான்கு ஆண்டுகள் நிறைவு
பெற்றது. எனினும், கடந்த செப்டம்பர் மாதம் முதல், ஜெயலலிதா முதல்வராக
இல்லாததால், நான்காண்டு நிறைவு விழாவை, அ.தி.மு.க.,வினர் கொண்டாடவில்லை.
வரும், 22ம் தேதி, ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். அப்போது,
நான்கு ஆண்டு நிறைவு விழாவையும், ஜெயலலிதா மீண்டும் முதல்வரானதையும்
சேர்த்து, விமரிசையாக கொண்டாட, அ.தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர்.கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது.
Comments