முஸ்லிம் இளைஞருக்கு வேலை தர மறுத்த தனியார் நிறுவனம்

தினமலர் செய்தி : மும்பை: முஸ்லிம் என்பதால், எம்.பி.ஏ., பட்டதாரிக்கு, தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை மறுக்கப்பட்டுள்ளது. மும்பையை சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஜேஷன் அலி கான். எம்.பி.ஏ., பட்டதாரி. பிரபல தனியார் வைர நகை நிறுவனத்தில், மார்க்கெட்டிங், எக்சிகியூட்டிவ் வேலைக்கு விண்ணப்பித்தார். அவருடன் விண்ணப்பித்த பிறருக்கு, வேலை கிடைத்த நிலையில், அலிகானுக்கு வேலை கிடைக்கவில்லை. இது குறித்து அவர், அந்த நிறுவன அதிகாரிக்கு போன் செய்து கேட்டபோது, 'நாங்கள் முஸ்லிம் அல்லாதவர்களை தான் வேலைக்கு எடுத்துள்ளோம்' என்றார்.
இதனால் விரக்தி அடைந்த அந்த இளைஞர், சமூக வலை தளத்தில் எழுதினார். அதை படித்த முஸ்லிம் இளைஞர்கள் பலரும் தங்கள் கருத்தை பதிவு செய்ததும் பரபரப்பு ஏற்பட்டது. இதையறித்த அந்த வைர நகை நிறுவனம்,' நாங்கள், மதத்தின் அடிப்படையில், வேலைக்கு ஆட்களை எடுப்பதில்லை' என தெரிவித்தது. எனினும், இந்த விவகாரம் குறித்து, தேசிய சிறுபான்மையினர் கமிஷன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Comments