தினமலர் செய்தி : சென்னை: தவறான செய்தியை பரப்பியதற்காக, வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்கக்
கோரி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, அ.தி.மு.க.,
வழக்கறிஞர்கள் புகார் அனுப்பி உள்ளனர்.கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை
நீதிபதிக்கு, அ.தி.மு.க., வழக்கறிஞர்கள், திவாகர், திருமாறன், செல்வகுமார்
ஆகியோர் அனுப்பியுள்ள புகார் மனு:உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எனக் கூறிக்
கொண்டு, 'டிவி' சானல்களில், கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்த பேட்டி
ஔிபரப்பப்பட்டது. மேல்முறையீட்டு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்,
திருத்தம் செய்ய, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தடை
விதித்திருப்பதாக பேட்டி அளித்துள்ளார். இதுகுறித்து,
உடனடியாக, கர்நாடக
உயர் நீதிமன்ற பதிவுத் துறையில், நாங்கள் சரிபார்த்தோம். அப்போது, தலைமை
நீதிபதி அவ்வாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என அறிந்தோம். எனவே,
பொய்யான செய்தியை, கிருஷ்ணமூர்த்தி பரப்பி உள்ளார். அதன் மூலம்,
நீதித்துறையின் புகழுக்கு களங்கம் விளைவித்துள்ளார். பொய் செய்தியை
பரப்பியதற்காக, அவர் மீதும், தனியார் 'டிவி' சானல்கள் மீதும், நீதிமன்ற
அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அந்த புகாரில்
கூறப்பட்டுள்ளது. வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மீது, பார் கவுன்சிலில்
புகார் அளிக்க உள்ளதாகவும், அ.தி.மு.க., வழக்கறிஞர் திவாகர்
தெரிவித்துள்ளார்.
Comments