'ஜெ., ஆட்சிக்கு வந்தால் நாட்டு வளர்ச்சிக்கு உதவும்' : பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம்

தினமலர் செய்தி : சேலம்: ''தமிழக முதல்வராக, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்,” என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.சேலத்தில், அவர் கூறியதாவது:ஜெ., மீண்டும் முதல்வராக பதவியேற்பதில் தவறில்லை; திறமை, துணிச்சல் மிக்க முதல்வர், தமிழகத்துக்கு தேவை. ஜெ., ஆட்சிக்கு வந்தால், தமிழகத்துக்கு மட்டுமல்ல; நாட்டின் வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்.தமிழகத்துக்கு, காவிரி நீர் பெற்று தருவது உள்ளிட்ட, கடமையை செய்ய காங்., தவறிவிட்டதால், விமர்சிக்கும் யோக்கியதை, அக்கட்சிக்கு கிடையாது.
ஊர் ரெண்டுபடும் அளவுக்கு, நாங்கள் அரசியல் நடத்தவில்லை.உலக அளவில், இந்தியா முதல்நாடாக வரவேண்டும் என்பதற்காகவே, பிரதமர் மோடி, வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறார். அவரது, மூன்று நாள் சீன சுற்றுப்பயணம், புதிய திருப்பத்தை ஏற்படுத்தும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Comments