தினமலர் செய்தி : புதுடில்லி: எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியுள்ளன.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 66.08 ரூபாயாக இருந்தது. இது, தற்போது 3.37 ரூபாய் உயர்த்தப்பட்டு, 69.45 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அதே போல், 52.76 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் டீசல் விலை, 2.98 ரூபாய் உயர்ந்து, 55.74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதாலும், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இறுதியாக, கடந்த ஏப்ரல் 16ம் தேதி, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 80 காசுகளும், டீசல் விலை, லிட்டருக்கு, 1.30 ரூபாயும் குறைந்தது. அதன் பிறகு, மே 1ம் தேதி, பெட்ரோல், லிட்டருக்கு, 3.96 ரூபாய்; டீசல், லிட்டருக்கு 2.37 ரூபாய் என்ற அளவில் விலை உயர்த்தப்பட்டன.
Comments