தினமலர் செய்தி : விருதுநகர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில்
விருதுநகர் மாநில அளவில் நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு
முன்னேறி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டு 1985ல் விருதுநகர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது முதல், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தில் தொடர்ச்சியாக 26 ஆண்டாக மாநில முதல் இடத்தில் இருந்த விருதுநகர் 2011-2012ல் 93.53 தேர்ச்சி சதவீதத்துடன் மூன்றாமிடம், 2012-2013ல் 94.93 தேர்ச்சி சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. கடந்தாண்டு 96.55 சதவீத தேர்ச்சி பெற்று ஒருபடி முன்னேறி நான்காம் இடத்தை பிடித்தது.

இந்தாண்டில் பிளஸ் 2 போல மாநில முதலிடம் பிடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் 97.98 சதவீத தேர்ச்சி பெற்று ஈரோட்டை விட .06 தேர்ச்சி சதவீதம் குறைந்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று கல்விமாவட்டங்களில் 333 உயர், மேல்நிலைப்பள்ளிகளில் 30,534 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 29,918 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.98 சதவீத தேர்ச்சியாகும்.
கடந்தாண்டை விட 1.43 சதவீதம் கூடுதல். மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு பாடவாரியாக கையேடு, "சிடி' வழங்கி சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆயினும் முதலிடம் பிடிக்காதது கல்வித்துறை அதிகாரிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
Comments