தமிழகத்தில் உஷ்., சப்தம் அதிகரிக்கும்

தினமலர் செய்தி : திருநெல்வேலி: பங்குனி , சித்திரை மாதங்களில் வெப்பம் அனல் கக்கும், கோடை வரும் போது, ஜில்லென., தாகம் தணிக்கும் தண்ணீர்பழம், இளநீர், நன்னாரி சர்பத், எலுமிச்சை ஜூஸ், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் என வியாபாரம் களை கட்டும். அனல் காற்றுக்கு பயந்து பலரும் வெளியை தலை காட்ட தயங்கி வீட்டுக்குள் முடங்கி விடுவர். மாலை நேரங்களில் ஆற்றங்கரை, பீச்சுகள் என தேடி கூட்டம் செல்லும். கோடை துவங்கும் முன்னதாக ஆரம்பமே அனல் பறக்கிறது. மதியம் வெயில் வாட்டம் இரவில் புழுக்கம் என மக்கள் அல்லல் படுவது இப்போதே துவங்கி விட்டது.


தற்போது தமிழகத்தில் பிப்ரவரி மாத இறுதியிலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் துவங்கி விட்டது. சென்னை , வேலூர், திருச்சி, சேலம், மதுரை, திருநெல்வேலி, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
காற்றின் ஈரப்பதம் குறைந்து வருவதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாகவும், தற்போது தமிழகத்தில் பரவலாக 95 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகியுள்ளது .
நெல்லை, மதுரை , திருச்சி , தர்மபுரி, திருவண்ணாமலை, சென்னை என அனல் தக தகக்கும் என்றும், கடந்த காலத்தை விட இந்த முறை வெப்ப தாக்கம் அதிகம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. சுமார் 112 டிகிரி அளவுக்கு வெயில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இன்று திருச்சியில்- 91, மதுரை; 93, கோவை; 91, திருச்சியில் அதிக பட்சமாக 97 டிகிரி பாரன்ஹீட்டாக இருந்தது. ஊட்டியில் குறைந்த பட்சம் 67 டிகிரியாக இருந்தது.

Comments