தினமலர் செய்தி : வாஷிங்டன்: பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்கள் குறித்து உலக நாடுகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் லியம்பாக்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர் மேலும் கூறியதாவது: பாகிஸ்தானில் தற்போது 120க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன. மேலும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 24 அணு ஆயுதங்கள் தயாரிக்கும் திறன் கொண்ட உலைகள் செயல்பட துவங்கியுள்ளது. ஆனால் தற்போது ஈரான் நாட்டு அணு ஆற்றல் திட்டம் மட்டுமே பேசி வருகிறோம்.
உலகில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் எதிரி நாடுகளிடம் கூட அரசியல் ரீதியாகவே தொடர்பு கொண்டுள்ளன. ஆனால் பாகிஸ்தானை பொறுத்தவரையில் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் அரசியல்வாதிகளா, ராணுவமா, உளவுத்துறையா என்பது தெரியாமல் அனைவரிடமும் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தானில் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைகளில் போய்விடும் அச்சம் காணப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comments