வெளியுறவு கொள்கையிலும் வலுப்படுத்த முயற்சிகள் நடந்துவருகி்ன்றன.இது இந்திய-அமெரிக்க உறவை பலப்படுத்துவதோடு உலக நாடுகளிடையேயும் வலுப்படுத்த தீவிர முயற்சிகள் நடந்து வருகின்றன.குடியரசு தின விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் இந்தவாரத்திலே தீவிர பணிகள் நடக்ககூடும்.இதை தொடர்ந்து குஜராத் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஆமாதாபாத் செல்கிறார்.கெர்ரி பயணத்தில், இந்தியா,பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பயணத்தில் இன்னும் முறையான அறிவிப்பு தெரிவிக்கப்படவில்லை.அமெரிக்க அதிபர் ஒபாமா, முதன் முதலில் 2008ல் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2012ல் மீணடும் அமெரிக்க அதிபர் ஆனார். அமெரிக்க அரசியலில் 3வது முறையாக ஒருவர் அதிபர் ஆக முடியாது.
அதிபர் பதவிஏற்ற பின் முதல் முறையாக இந்தியா வந்தார். அதன் பின்னர் 2வது முறையாக அதிபர் ஆனபின் 2வது முறை இந்தியா வருகிறார்.பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று டில்லியில் நடக்கவுள்ள குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் ஒபாமா. இதன்மூலம் இந்தியாவிற்கு இரு முறை வரும் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெறுகிறார்.
Comments