மும்பை ரயில்கள் தாமதம்: ஆத்திரமுற்ற கும்பல் வன்முறை

தினமலர் செய்தி : மும்பை: மும்பையில் ரயில்கள் தாமதமாக வந்ததால் ஆத்திரமுற்ற பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் அலுவலகம் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர் . இந்த சம்பவம தொடர்பாக மத்திய அமைச்சர் பிரபு ரயில்வே அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தார். தற்போது நிலைமை சீரானது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திவா பகுதியில் ரயில் இயக்கத்துக்குத் தேவையான மின்சாரம் கடத்தும் பேண்டோகிராப் லைனில் ஏற்பட்ட விரிசல் காரணமாக 3 முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பீக் அவரில், அலுவலகத்திற்கு செல்ல வந்தவர்கள் எரிச்சல், கோபமுற்றனர்.

ரயில் நிலையங்களில் கூடிய பயணிகளுக்கும், காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஜீப் மற்றும் அரசு வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் ஆய்வு நடத்தி விசாரிக்க மாநில அமைசர்களை முதல்வர் பட்னாவிஸ் அனுப்பி வைத்துள்ளார்.

Comments