தினமலர் செய்தி : சென்னை: முதல்வர் வாழ்த்து இல்லாத புத்தாண்டாக, 2015 அமைந்துள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டுக்கு, முதல்வர் பதவியில் இருப்பவர், பொதுமக்களுக்கு
வாழ்த்து சொல்வது வழக்கம்.
ஆனால், ஜெயலலிதா முதல்வர் பதவி
வகிக்கும் தகுதியை இழந்ததால், அவருக்கு பதிலாக முதல்வராக பொறுப்பேற்ற
பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, தயங்கி வருகிறார்.
ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, ஆயுத பூஜை மற்றும் விஜய தசமிக்கு, முதல்வர்
பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்தார். ஜெயலலிதா ஜாமினில் வெளிவந்த பிறகு,
பண்டிகைகளுக்கு, முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தீபாவளி, கிறிஸ்துமஸ்
பண்டிகைகளுக்கு, வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல், புத்தாண்டுக்கும்
வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதனால், முதல்வர் வாழ்த்து இல்லாத புத்தாண்டாக,
2015 அமைந்துள்ளது.
Comments