" ராஜினாமா இல்லை : வதந்திகளை நம்ப வேண்டாம்”- மு.க., ஸ்டாலின்


தினமலர் செய்தி : சென்னை: தி.மு.க., பொருளாளர் பதவியை தான் ராஜினாமா செய்யவில்லை என்றும் இது தொடர்பாக பொய்யான தகவல் பரப்பப்பட்டு உள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். ஜனநாயக முறைப்படி நடந்து வரும் தி.மு.க., தேர்தல் குறித்து திட்டமிட்டு பரப்பி விடப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கட்சியில் இருந்து வெளியேறுவதாக வந்த செய்தி தவறானது.
கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறு தகவல் பரப்பி விடப்பட்டுள்ளது. தம் மீதான இந்த வதந்தி தவறானது. தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுசெயலர் பதவிக்கு அன்பழகனும் போட்டியிடுகின்றனர். நான் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடவில்லை. வரும் 9ம் தேதி நடக்கும் தேர்தலில் நான் பொருளாளர் பதவிக்கே போட்டியிடுகிறேன். கட்சி தலைவர் கருணாநிதிதான். இது தான் எனது விருப்பமும் கூட. எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கட்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். இவ்வாறு மு.க., ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க.,வில் கட்சியின் உயர் மட்ட பொறுப்பான பொது செயலர் மற்றும் தலைவர் பதவியை பிடிக்க மு.க., ஸ்டாலின் விரும்புவதாகவும், தனது பதவிகளான இளைஞரணி பொதுசெயலர், கட்சியின் பொருளாளர் ஆகிய பதவிகளை ராஜினாமா செய்யவிருப்பதாக இன்று செய்தி வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

Comments