இலங்கையை விட்டு கருணா & கே.பி. ஓட்டம்? விமான நிலையங்களில் உஷார்

தினமலர் செய்தி : கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோல்வியடைந்ததை தொடர்ந்து, கருணா உள்ளிட்ட 3 அரசியல் பிரமுகர்கள் இலங்கையை விட்டு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை அதிபராக சிறிசேன பதவியேற்றுள்ள நிலையில், ராஜபக்சே குடும்பத்தினர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விடுதலை புலிகளின் முன்னாள் சர்வதேச தொடர்பாளர் கே.பத்மநாபன் இலங்கையை விட்டு தப்பி சென்று விட்டதாகல அதிபரின் செய்தி தொடர்பாளர் அஜிதா சிறிசேன கூறியுள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அவர் கொழும்புவில் உள்ள பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் வி.ஐ.பி.,க்கள் வழியாக தப்பி சென்று விட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். 

Comments